கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை
Primary tabs

கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை
தன்னுடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோற்று, போட்டியில் இருந்து வெளியேறியதால் ஷாரூக்கான் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒன்பதாவது போட்டியில், அரை இறுதியில் நுழைந்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஷாரூக். தன்னுடைய அணியின் சியர்லீடர்களின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஷாரூக், ''என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்களால் அரை இறுதிக்குள் செல்ல முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. சில நேரங்களில் நம்முடையை சிறந்த செயல்கள் கூட போதுமானதாக இருப்பதில்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய கொல்கத்தா அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சியர்லீடர்களுக்கும் என்னுடைய நன்றிகள்'' என்று கூறியுள்ளார்.
This was fun to do, who would you select? #IPL2016 #GLvSRH https://t.co/PJzTXVucI7
— Lisa Sthalekar (@sthalekar93) May 27, 2016
வெள்ளித்திரையில், ராகுல் தோல்கையாவின் இயக்கத்தில் தற்போது 'ரேயீஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக் கான். இதில் நவாசுதீன் சித்திக் மற்றும் பாகிஸ்தானி நடிகர் மஹிரா கானும் ஷாரூக்குடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Log in to post comments
- 185 reads